DSLR கேமராகளை zoom வகுப்புகள் மற்றும் கலந்துரையாடள்களுக்கு பயன்படுத்துவது எவ்வாறு.?
சியோமியின் சமீபத்திய முதன்மை பிரீமியம் ஸ்மார்ட்போனான Mi 10 இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது
சியோமியின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் Mi 10 ஐ அறிமுகப்படுத்துவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. கோவிட் -19 தொற்றுநோயால் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதற்கு தாமதமானது. தற்போது சில பகுதிகளில் லாக்டோவ்ன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சியோமி இறுதியாக இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
தற்சமயம் சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.முன்னதாக ஷியோமி இந்த ஆண்டின் தொடக்கத்தில், Mi மற்றும் ரெட்மியை துணை பிராண்டுகளாக அறிவித்தது, தொலைபேசி சந்தையின் பிரீமியம் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வந்தது. அதன் விளைவாக இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Mi 10 – 8 ஜிபி/128 ஜிபி மாடலின் விலை ரூ .49,999. 8 ஜிபி/56 ஜிபி மாடலின் விலை ரூ .54,999. ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்காக சியோமி 30W வயர்லெஸ் சார்ஜரை தொகுக்கிறது. இவ்விரு மாடல்களும் Coral Green மற்றும் Twilight Grey நிறங்களில் வருகின்றன.
இந்த ஸ்மார்ட்போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் அமேசான் மற்றும் மி.காம் வலைதளங்களில் தொடங்குகிறது.